சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!அனைத்து ஆர்.டி.ஓ. அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!
அனைத்து ஆர்.டி.ஓ. அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று இது தொடர்பாக வழக்கு ஓன்றுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன்படி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஊழலை தடுக்கும் வகையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது கட்டாயம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து ஆர்.டி.ஓ. அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை போக்குவரத்துத்துறை செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.