சென்னை உயர்நீதிமன்றம் ,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட அவசர வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 ஆயிரத்து 750 பேர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.
போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும், இதன் மூலம் மருத்துவ அவசர சிகிச்சைகள் அளிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோன்ற வழக்கில் முந்தைய தடை உத்தரவுகளை சுட்டிக்காட்டி தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் மனுதாரர் முறையீடு செய்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் நாளை விசாரணைக்காக எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…