சென்னை உயர்நீதிமன்றம் பிரான்ஸ் நாட்டவரை கொன்று சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக புதுச்சேரி தம்பதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!
சென்னை உயர்நீதிமன்றம் , பிரான்ஸ் நாட்டவரை கொன்று சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக புதுச்சேரி தம்பதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. புதுச்சேரியைச் சேர்ந்த கற்பகம், அவரது கணவர் ஏழுமலை உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, கொல்லப்பட்ட ஜாக்குஸ் ஆண்டோய்னின் மகள் மேரி ஜாக்குஸ் தொடர்ந்த வழக்கு புதுச்சேரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்து. தங்களுக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும் வழக்கை ரத்து செய்யுமாறும் கற்பகம், ஏழுமலை ஆகியோர் சென்னை உயர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதி வழக்கை விரைந்து விசாரிக்கவும், ஒத்துழைக்க மறுப்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.