சென்னை உயர்நீதிமன்றம் பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் முதல்வர்கள் நியமன வழக்கில் தடையை நீக்கி உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம் ,பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான நான்கு கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.நான்கு கல்லூரிகளுக்கான முதல்வர் பதவியிடங்களை முறைகேடாக நிரப்ப முயல்வதால், அதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியர்கள் இருவர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த விடுமுறை கால நீதிபதி பவானி சுப்பராயன், மறு உத்தரவு வரும் வரை முதல்வர்கள் பதவி நியமனம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் மனுதாரர்கள் குற்றச்சாட்டு தவறானது என்ற பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் பதில் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்ருஹனா புஜாரி, முதல்வர் நியமனம் தொடர்பாக விதிக்கப்பட்ட தடையை நீக்கியும், அறிவிப்பாணைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.