உயர்நீதிமன்றம் பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், 2 ஆயிரத்து 800 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் முதல் தவணையாக, 15 விழுக்காடு தொகையான 420 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-17 நிதியாண்டில் வருமானத்தை குறைத்து காட்டிய புகாரில் அந்நிறுவனத்தின் 68 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து காக்னிசன்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், சிடிஎஸ் நிறுவனத்தின் முடக்கப்பட்ட ஒரு வங்கி கணக்கை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனையொட்டி, முதல் தவணையாக, 420 கோடி ரூபாயை வருமான வரித்துறைக்கு காக்னிசன்ட் நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மீதி தொகைக்கு நிறுவனத்தின் மற்ற முதலீடுகளை உத்தரவாதங்களாக 2 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…