சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி தேர்வு..!
கொலிஜியம் அமைப்பு தான் உச்சநீதிமன்றத்துக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது.
மேலும், உத்தரகாண்ட் மாநில தலைமை நீதிபதியாக உள்ள கே.எம்.ஜோசப் மற்றும் வினித் சரண் ஆகியோரின் பெயரையும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. தற்போது,மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் தஹில் ரமணியை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கவும், கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, இந்திரா பானர்ஜியை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இரண்டாவது பெண் தலைமை நீதிபதி ஆகிறார் . வழக்கறிஞராக தனது பணியை தொடங்கிய இவர், மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல், நீதிபதியாக பணியாற்றி வருகிறார்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமணியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை