சென்னை அருகே 10வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!
10 வயது சிறுமிக்கு சென்னை தாம்பரம் அருகே பாலியல் தொல்லை கொடுத்த வங்கி ஆலோசகரை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேடவாக்கத்தைச் சேர்ந்த சேவியர், 10வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சேவியரை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.