நண்பனைக் கொலை செய்த இளைஞர் சென்னை ரிச்சி தெருவில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரிச்சி தெரு, முகமது உசேன் சந்துப் பகுதியில் உள்ள மின்னணு பொருட்கள் விற்பனையகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் பிரபு ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் கடையின் குடோனில் இருவரும் தங்கினர். இன்று காலை குடோனை திறந்த போது சரவணன் தூக்கிட்ட நிலையிலும், பிரபு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்திலும் சடலமாக கிடந்தனர்.
நண்பர்களாக இருந்த இருவரும் 6 மாத காலம் பேசாமல் இருந்துள்ளனர். பின்னர் மீண்டும் நட்புடன் பழகிய நிலையில் நேற்றிரவு மது அருந்திய போது பிரச்சனை ஏற்பட்டு கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…