சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பு…!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தாமதித்தால் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கவர்னர் கிரண்பேடியிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் காவிரி விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது புதுச்சேரி அரசு.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.