சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!
நோயாளிகளின் உறவினர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் தேவானந்தன் நேற்று இரவு மீஞ்சூரை சேர்ந்த மாரியம்மாள் என்ற திருநங்கைக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அவரின் உறவினர் ஜெயேந்திரன் பயிற்சி மருத்துவரை தகாத வார்த்தையில் பேசி அவரை தாக்கியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட பயிற்சி மருத்துவர் தேவானந்தன் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினரினரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் ஜெயேந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் பொதுவாக பயிற்சி மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பயிற்சி மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.