சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை :ஸ்தம்பித்து போன போக்குவரத்து ….!!!
சென்னையில் அதிகாலை 4 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் நேற்றிரவு மலை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வடதமிழகப் பகுதிகளை வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரையில் இரவுக்கு மேல் மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை நீடிக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியிருக்கிறது. சென்னை மட்டுமன்றி, அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை தொடர்கிறது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.