சென்னையில் வாங்கிய கடனை திருப்பி தரா முடியாததால் கடத்தல் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலதிபர்!

Default Image

வட்டிக்கு வாங்கிய கடனை திருப்பி தரா முடியாததால் சென்னையில் தொழிலதிபரை காரில் கடத்தி அடித்து துன்புறுத்தி சாலையில் வீசி சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

ஈக்காட்டுதாங்கல் அம்பாள் நகரை சேர்ந்தவர் விஜய் பிராங்ளின். ஞாயிற்று கிழமை இரவு தனது வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு பக்கத்திலும் கார்கள் வந்து நின்றன. சிறிது நேரத்தில் விஜய் பிராங்ளினை காரில் ஏற்றி கடத்திச் சென்ற கும்பல், காரில் வைத்தே அடித்து துன்புறுத்தியது. அண்ணா நகர் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது காரில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு சென்றது அந்தக் கும்பல். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிராங்ளின், காயத்துடன் வந்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அண்ணா நகரை சேர்ந்த பைனான்சியர் சசிக்குமாரும், அவரது கூட்டாளிகளும் பணம் கேட்டு கடத்தி அடித்து துன்புறுத்தியதாக கூறினார். இதையடுத்து தனிப்படை அமைத்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் பைனான்சியர் சசிக்குமார் மற்றும் வினோத்குமார், முகேஷ், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்ததுடன் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிராங்ளின் வெளிநாட்டு கை காடிகார விற்பனையகம் ஒன்றை கிண்டியில் வைத்திருந்தார்.

தொழிலை மேம்படுத்துவதற்காக அண்ணாநகரை சேர்ந்த பைனான்சியர் சசிக்குமாரிடம் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால் தொழிலில் நட்டம் ஏற்பட்டு பிராங்களின் தனது விற்பனையகத்தை மூடிவிட்டார். இதனால் வட்டியும் தர முடியாமல், அசல் தொகையையும் தரா முடியாத நிலையில் தான் அவரை கடத்தி துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் துரிதமாக செயல்பட்டு கடத்தல் கும்பலை பிடித்த கிண்டி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்