சென்னையில் ரூ.100 ஐ தாண்டியும் நிற்காமல் உயரும் பெட்ரோல் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.37 க்கும் டீசல் ரூ.94.15 க்கும் விற்பனை.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது.சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல் ரூ.100 ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருவது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.
நேற்று எந்த விலையேற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 0.31 காசுகள் உயர்ந்து ரூ .101.37 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 0.9 காசுகள் உயர்ந்து ரூ .94.15 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் குறிக்கும் விலைகள் பற்றி தெரிந்துகொள்ள
உங்கள் நகரம் / நகரத்தில் எரிபொருளின் விலைகளை (பெட்ரோல் / டீசல்) தெரிந்துகொள்ள நீங்கள் “RSP Dealer Code of Petrol Pump” என்று மெசேஜ் டைப் செய்து 92249 92249 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, எஸ்.எம்.எஸ். டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு “RSP 102072” to 92249 92249 வரை ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து IOCL டீலர் குறியீடுகளைப் பெறலாம்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…