சென்னையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பெட்ரோல் விலை!பாஜக ஆட்சியில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் பெட்ரோல் விலை?

Default Image

 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ,மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் பெட்ரோல், டீசல் இன்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் டெல்லியில் பெட்ரோல், டீசலில் 19 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2012ம் ஆண்டுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் சிரமம் கருதியும், பணவீக்கம், விலைவாசி உயராமல் இருக்க உடனடியாக உற்பத்தி, கலால்வாரி உயர்வைக் குறைக்க வேண்டி மத்திய அரசுக்கு கடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றபின் பிரதமர் மோடியின் அரசு எதிர்கொள்ளும் உச்சபட்ச பெட்ரோல், டீசல் விலை உயர்வு இதுவாகும்.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப் பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. அதன்பின் நாள்தோறும் சில காசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாகப் பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக இருந்தது. அதிரும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையில் அதிகமான உயர்வு இருந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. நாள்தோறும் பெட்ரோல், டீசலுக்கு அதிகமான விலையையே மக்கள் அளித்து வருகின்றோம் என புலம்புகின்றனர்.

டெல்லியில் மட்டும் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 13 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு 15 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசலில் 19 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் சராசரியாக லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் உயர்ந்து, ரூ.74.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு, செப்டம்பர்4-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.06 காசுகளாக விற்பனையானது. அதற்குப் பின் இப்போதுதான் இந்த விலை உயர்வு வந்துள்ளது. டீசலைப் பொறுத்தவரை, டெல்லியில் ஒரு லிட்டர் 19 காசுகள் உயர்ந்து ரூ.65.66 காசுகளாக இன்று விற்பனையாகிறது.

சென்னையைப் பொறுத்தவரை டீசல் ஒரு லிட்டர் ரூ.69.27 காசுகளுக்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.19 காசுகளுக்கும் இன்று விற்பனையாகிறது. கடந்த 20-ந்தேதியில் இருந்து இன்று வரை பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 34 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டீசலில் லிட்டர் ஒன்றுக்கு 37 காசுகள் அதிகரித்துள்ளது.

சென்னையில் கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77க்கு விற்பனையானது. அதன்பிறகு, 6 ஆண்டுகளுக்குப் பின் ரூ.77க்கு மேல் தற்போது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்மாவட்டங்களில் இந்த விலையோடு போக்குவரத்துச் செலவையும் சேர்க்கும் போது மேலும் அதிகரிக்கலாம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்