சென்னையில் ரஜினியின் வீட்டை முற்றுகையிட முயற்சித்தவர்கள் கைது!
ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு போடப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி வீடு அமைந்துள்ள தெரு முனையில் பலத்த சோதனைக்குப் பிறகே பொதுமக்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.