சென்னையில் மோனோ ரயில் திட்டம் நிறுத்திவைப்பு! அமைச்சர் தங்கமணி
சென்னையில் இடப்பற்றாக்குறை மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பால் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.வழக்கம்போல் அதிமுக -திமுக இடையே விவாதம் நடைபெற்றது.இதில் திமுகவை சேர்ந்த அன்பில் மகேஷ் மோனோ ரயில் குறித்து கேள்வி எழுப்பினார்.இந்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.
அன்பில் மகேஷ் வேளச்சேரி- வண்டலூர் மோனோ ரயில் திட்டம் பற்றிய கேள்வி எழுப்பினார்.இதற்கு சென்னையில் இடப்பற்றாக்குறை மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பால் மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.