2 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் சென்னை வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் தனியார் திரையரங்கம் அருகில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இந்த இரண்டு டிரான்ஸ்பார்மர்களுக்கும் அருகில் இருந்த சிறிய மின் பெட்டியில் இருந்த ஒயர்களில் இருந்து தெறித்த தீ பொறி கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த ஒரு டிரான்ஸ்பார்மருக்கு பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனையடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அருகில் இருந்த தனியார் திருமண மண்டப சுவர்களில் பதித்திருந்த டைல்ஸ்கள் உடைந்து நொறுங்கின. இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த சிட்கோ நகர் தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், அந்த டிரான்ஸ்பார்மர் முற்றிலும் தீயில் எரிந்து கருகியது.
இதனால் இப்பகுதியில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை முதல் 15-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் புதிய டிரான்ஸ்பார்மரை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “இரவு நேரங்களில் மிக கூடுதலான மின் உபயோகத்தால் மின்சார ஒயர்களில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும். புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி இன்று நிறைவடையும்” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…