33 லட்சம் பணம் சென்னையில் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பைனான்சியரை கடத்தி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மோகன், வடபழனியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மோகனிடம் தன்னை சரவணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் முக்கியப் பிரமுகருக்கு பெரும் தொகை தேவைப்படுவதாகக் கூறி அழைத்துச் சென்றார்.
ஆனால் மோகனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்திய சரவணன், மோகனின் உறவினர்களிடம் இருந்து 33 லட்சம் ரூபாயையும், 28 சவரன் நகையையும் பறித்தார். போலீசாரின் விசாரணையில் கடத்தல் கும்பல், கிருஷ்ணராஜ் என்பவனை சரவணன் என்ற பெயரில் மோகனிடம் பழகச்செய்து திட்டமிட்டு கடத்தியது தெரியவந்தது. கிருஷ்ணராஜை போலீசார் தேடிவந்த நிலையில் அவன் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…