வீட்டின் பூட்டை உடைத்து சென்னை நங்கநல்லூரில் நகை, பணத்தை கொள்ளையடித்த நபரை, 2 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்துள்ளனர். நேரு நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, புது வீடு கட்டுவதற்காக பழைய வீட்டை இடித்து விட்டு அருகே உள்ள சிறிய அறையில் பொருட்களை வைத்துள்ளார்.
அங்கிருந்த பீரோவில் 100 சவரன் நகைகள் கொள்ளை போனதாக, பழவந்தாங்கல் போலீசில் வியாழனன்று காலை அவர் புகார் அளித்தார். அங்கு ஆய்வு செய்த தனிப்படை போலீசார், 65 சவரன் நகைகள் வீட்டிலேயே இருந்தது கண்டுபிடித்தனர்.
வீட்டின் பூட்டு ஆக்சா பிளேடால் அறுக்கப் பட்டிருந்ததன்பேரில், கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு வந்து செல்லும் பிளம்பர் ஜெகதீசனை சந்தேகித்து பிடித்து விசாரித்தனர். அப்போது, 35 சவரன் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஜெகதீசனை கைது செய்தனர். 2 மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்த தனிப்படையினரை, பரங்கிமலை துணை ஆணையர் முத்துச்சாமி பாராட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…