சென்னையில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
இன்று அதிகாலை முதல் சென்னையில் பிரபல நகைக்கடை வியாபாரியின் இல்லம் மற்றும் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம் பகுதியில் வசிக்கும் கவுதம் என்ற நகைவியாபாரியின் இல்லத்தில் இன்று காலை 8 பேர் கொண்ட வருமான வரி அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
வேப்பேரி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான 15 கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.