சென்னையில் பல்வேறு இடங்களில் கத்தி முனையில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரை கைது!
காவல் துறையினர் ரோந்து, வாகன சோதனை நடத்தப்பட்டாலும் அதையும் மீறி தினந்தோறும் சென்னையில் அரங்கேறி வருகிறது கத்தி முனை வழிப்பறி சம்பவங்கள். கடந்த 9-ம் தேதி திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் தனியார் பள்ளியொன்றின் பாதுகாவலர் கணேசன் என்பவரை கத்தியால் தாக்கி கொள்ளையர்கள் செல்போன், பணத்தை பறித்து சென்றனர். பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலேயே கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய திருவொற்றியூரை சேர்ந்த பார்த்திபன் மற்றும் மணி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், ஞாயிற்று கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை 14 இடங்களில் வழிப்பறி நடந்துள்ளன.
சென்னை அரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3பேர் ஒரு பெண்ணிடம் கைப்பையைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள், சூளைமேட்டில் தமிழரசன், பிரபு என்ற இளைஞர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிச் செல்பேசியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.