சென்னையில் பயணியின் சட்டையை கிழித்த பெண் டிக்கெட் பரிசோதகர்!
பெண் டிக்கெட் பரிசோதகரும், பயணியும் சென்னை ரயில் நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கூடுவாஞ்சேரியிலிருந்து வந்த டீனு என்ற பயணி தண்ணீர் பிடிப்பதற்கு ரெயிலில் இருந்து இறங்கி உள்ளார். அங்கு நின்ற டிக்கெட் பரிசோதகர் நெஸ்கல் குமாரி, அவரிடம் பயணச்சீட்டு கேட்டு அவரது சட்டையை பிடித்து இழுத்ததால் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பயணி டீனுவுக்கு வாயில் இருந்து ரத்தம் வழிந்ததால் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சக பயணிகள் ரயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
டிக்கேட் பரிசோதகர், தனது பயணச்சீட்டை கிழித்துப் போட்டதாகவும் இது குறித்து கேட்டதால் தாக்கி சட்டையை கிழித்ததாகவும் பயணி டீனு தெரிவித்தார்
அதே நேரத்தில் டிக்கெட் எடுக்காமல் வந்த டீனு, தன்னை தாக்கியதாக டிக்கெட் பரிசோதகர் நெஸ்கல் குமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவரது புகாரின்பேரில், எழும்பூர் ரயில்வே போலீசார் இருவர் மீதும் தலா 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காயம் காரணமாக, டீனுவும், காயம் ஏற்பட்டதாக கூறிய நெஸ்கல் குமாரியும், சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.