சென்னையில் பணிபுரிந்த இராணுவ வீரர் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது!
சென்னையில் பணிபுரிந்த இராணுவ வீரர் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைசூரில் இருந்து சென்னை வந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை காட்பாடி ரயில் நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது எஸ் 14 பெட்டியில் ஒரு பெண் கூச்சலிட்டதையடுத்து உறக்கத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விழித்தனர்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு அதே பெட்டியில் பயணம் செய்த ராணுவ வீரர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் அவரை காட்பாடி ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்தப் பெண் திருச்சியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. பாலியல் தொந்தரவு கொடுத்தவர் பெயர் துஷ்யந்த் என்பதும், ராணுவ வீரரான அவர் சென்னை கோட்டையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. 4 நாட்கள் சாதாரண விடுப்பில் மைசூர் சென்று சென்னை திரும்பும் போது இச்சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்தது. வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.