சென்னையில் நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த மகேந்திரா கே.யூ.வி. 100 வகை கார்!
கார் திடீரென சென்னை பரங்கிலையில் நடுச்சாலையில் தீப்பற்றி எரிந்தது.
பூந்தமல்லியில் இருந்து கிண்டி நோக்கி சென்றுகொண்டிருந்த மகேந்திரா கே.யூ.வி. 100 வகை கார் பரங்கிமலை பட்ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென எஞ்சினில் இருந்து புகை வெளியேறியது.
விபரீதத்தை உணர்ந்து காரில் இருந்த பெண்ணும் ஓட்டுநரும் அவசர அவரமாக வெளியேறிய நிலையில் கார் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து பரங்கிமலை தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்துவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.