16 வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடக்க நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டு, 13 முதல் 20 ஆம் தேதி வரை, சென்னையில் இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது. விழாவில் தமிழ் உள்ளிட்ட சர்வதேச மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில், தமிழ் மொழியில், பரியேறும் பெருமாள், ராட்சசன், வடசென்னை, 96 உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. சிறப்பு திரைப்படமாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் திரையிடப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், ஆஸ்திரேலியன், பிரேசில் உள்ளிட்ட 50 மொழிகளில், மொத்தம் 150 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் மிகவும் பேசப்பட்ட, பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 திரைப்படம், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெறுமாள், இரானிய மொழியில் பிரபல இயக்குநர் ஜாபர் பனாஹி இயக்கத்தில் வெளியான 3 பேசஸ், இத்தாலி மொழியில் வெளியாகி பெயர்பெற்ற டாக்மேன் உள்ளிட்ட பிரபல திரைப்படங்கள் இந்த திரைப்படத் திருவிழாவில்
திரையிடப்பட உள்ளன. சென்னையில் உள்ள தேவி, ரஷ்ய கலாச்சார மையம் உள்ளிட்ட திரையங்கங்களில் 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது.
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…