சென்னையில் தொடங்கியது பலத்த கனமழை…!!!
காற்றழுத்த தாழ்வுமண்டலம் அதீதிவிரமாக மாறியநிலையில் அது புயலாக உருவெடுத்து மதயானை பலம்கொண்ட புயல் என்பதால் கஜா புயல் என்று பெயரிட்டனர்.இந்த கஜா புயலாக வலுப்பெற்று நாகை மற்றும் காரைக்கால் கடற்கரையில் இருந்து 138 கிலோ மீட்டர் தொலையில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புயல் தற்போது மணிக்கு 16.8 கி.மீ.யாக இருந்த புயலின் வேகம் தற்போது மணிக்கு 10 கி.மீ. வேகமாக குறைந்துள்ளது.மேலும் புயலின் காரணமாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்ய தொடங்கியது.இந்நிலையில் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.புறர்நகர் பகுதியான அடுத்த சோழிங்கநல்லூர், மேடவாக்கம் பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடியில் பலத்த மழை பெய்து வருகிறது. கஜா புயல் காரணமாக சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
DINASUVADU