சென்னையில் சோகம்!காதல் தம்பதி குழந்தையின்மையால் தூக்கிட்டுத் தற்கொலை!
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சத்யா நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை சுகன்யா தவிர்த்து வந்துள்ளார். நேற்று மாலை, தனது வேதனையை வெளிப்படுத்திய சுகன்யாவுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்ற , சந்திரன் வீடு திரும்பிய போது சுகன்யா தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தனது காதல் மனைவி இல்லாத உலகில் தானும் வாழவிரும்பவில்லை என்று கடிதம் எழுதிய சந்திரன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றின் மறுமுனையில் தானும் தூக்குப் போட்டுக் கொண்டார். வீட்டுக் கதவு வெகுநேரம் பூட்டியிருந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் பார்த்தபோது இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்காக அதிநவீன மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் குழந்தையின்மையை ஒரு குறையாக கருதி, வாழ வேண்டிய தம்பதி உயிரை மாய்த்துக் கொண்டதுதான் சோகம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.