வயதான பெண்களை குறி வைத்து சென்னையில் 68 வயது நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை வளசரவாக்கம் வேலன் நகரில் வசிக்கும் லஷ்மி என்ற 70 வயதான பெண் அணிந்திருந்த 4 சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். ஆழ்வார் திருநகரில் கடைக்கு செல்வதற்கான நேற்று சாலையோரம் நடந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 68 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கரவாகனத்தில் பின்தொடர்ந்து வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் கேகே நகரில் ஒரு பெண்ணிடம் அந்த வயதான நபர் செயின்பறிப்பில் ஈடுபட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள்தான் செயின் பறிப்பில் ஈடுபடுவது வழக்கம் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், வயதான நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் தங்களுக்கு விசித்திரமாக இருப்பதாக கூறியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அந்த நபரை வளசரவாக்கம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…