செயின்பறிப்பிற்கு சென்னையில் புதிய உத்தியை கையாண்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட் அருகே நடந்து சென்ற பெண் ஒருவரை இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர்கள் இடித்து தள்ளி விட்டு செயின் பறிக்க முயன்றனர். இதனையடுத்து பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர்ந்த அன்பரசு மற்றும் ராஜேஷ் என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் செல்லும் இவர்கள் சாலையில் நகை அணிந்து செல்பவர்கள் மீது மோதி விடுவதாகவும், கீழே விழுந்தவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்து செயினை பறித்துச் செல்வதாகவும் கூறியுள்ளனர். இருவரிடமிருந்தும் 6 மொபைல் போன்கள், 5 சவரன் நகை, இருசக்கரவாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…