சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்!
சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11பேரையும் கைது செய்தது.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் போலீசார் கைதான 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தியது.
இதைதொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா வழக்கில் கைதான 17 பேருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் கைதான 17 பேர் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.