சென்னையில் சிகிச்சைக்கு வரும் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து நண்பருக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மருத்துவர் கைது!
சிகிச்சைக்கு வரும் பெண்களை சென்னை மயிலாப்பூரில் செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துவந்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.எம்.கிளினிக்கிற்கு பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவரான சிவகுருநாதன் , சிகிச்சைக்கு வந்த பெண்ணின் மேலாடையை கழற்றி தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பெண், தன்னுடன் வந்திருந்த மற்றொரு பெண்ணிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் மருத்துவரிடம் செல்போனை கேட்டபோது, மருத்துவர் சிவகுருநாதன், செல்போனில் இருந்த மெமரி கார்டை எடுத்து வெளியே வீசியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைதொடர்ந்து, போலீசார் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவர் சிவகுருநாதன் செல்போனில் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகுருநாதன் எடுக்கும் வீடியோக்களை வாட்ஸப் மூலம் நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். யாருக்கு வீடியோக்களை அனுப்பினார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.