சென்னையில் சாலை அமைக்க 6,400 மரங்கள் வெட்டப்பட்டு, 2,560 ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்படுகிறது!
இரண்டு பிரிவுகளாக இந்த சாலை திட்டப்பணி தாம்பரம் முதல் அரூர் வரையும், அரூர் முதல் சேலம் வரையும் என மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் சென்னை- சேலம் இடையே 60 கிலோமீட்டர் தூரம் மிச்சமாகி பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பசுமை வழி சாலைக்காக 25 பெரிய பாலங்கள், 156 சிறிய பாலங்கள், 578 மழை நீர் வடிகால் பாய்வதற்கான பாலங்கள் மற்றும் 9 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. மேலும், 8 இடங்களில் சுங்கச்சாவடிகளும், 10 இடங்களில் பேருந்து மற்றும் லாரி நிறுத்தும் இடமும் அமைக்கப்படுகிறது.
ஆனால் இந்த சாலையை அமைக்க 6,400 மரங்கள் வெட்டப்பட்டு, 2,560 ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்படுகிறது. மேலும் 120 ஹெக்டேர் வனப்பகுதியும் கையகப்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தை செயல்படுத்த 11 லட்சத்து 20,000 கிலோ லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சாலை அமையவுள்ள பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்கள் என்பதால் சேலம், தர்மபுரி மாவட்டத்தில் 2,988 விவசாயிகளிடம் 724 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த சாலை புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட விலங்கினங்கள் நடமாடும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால், சாலை அமைந்தபின்பு வன விலங்குகள் அந்த இடத்தில் மாற்று இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று வனஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.