போலீசார் சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு நடந்த வழிப்பறி சம்பவத்தின் போது நகை வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில்,போக்குவரத்து சிக்னல் கேமராக்கள் பழுதால் கொள்ளையனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்
திருச்சியைச் சேர்ந்த 68 வயது நகைவியாபாரியான ரங்கராஜன் தொழில் விஷயமாக சென்னை வந்திருந்தார். கடந்த 26- ந் தேதி மலைக்கோட்டை விரைவு ரயிலைப் பிடிக்க எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வேப்பேரி வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல் ஆணையர் அலுவலகம் அருகே சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், ரங்கராஜன் வைத்திருந்த 500 கிராம் நகையுடன் கூடிய பையை பறித்துச் சென்றனர். அதிர்ச்சி அடைந்த ரங்கராஜன் வழிப்பறி திருடர்களை தனது இருசக்கர வாகனத்தில் துரத்த முயன்ற போது காவல் ஆணையர் அலுவலகம் எதிரே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியதில் தூக்கி வீசப்பட்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ரங்கராஜன் வரும் வழியில் சவுகார்பேட்டை யிலிருந்து காவல் ஆணையர் அலுவலகம் வரை 25 போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன, அவற்றில் 20 கேமராக்கள் செயல்படாததால் கொள்ளையர்கள் குறித்து அடையாளங்கள் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் காவல் துறையினர். இதனால் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதே வேளையில் இந்த சம்பவத்தை ஆதாயக்கொலையாக வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். தனியார் கட்டடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…