சென்னையில் கொள்ளையனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்!

Default Image

போலீசார் சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு நடந்த வழிப்பறி சம்பவத்தின் போது நகை வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில்,போக்குவரத்து சிக்னல் கேமராக்கள் பழுதால் கொள்ளையனை கண்டுபிடிக்க முடியாமல்  திணறி வருகின்றனர்

திருச்சியைச் சேர்ந்த 68 வயது நகைவியாபாரியான ரங்கராஜன் தொழில் விஷயமாக சென்னை வந்திருந்தார்.  கடந்த 26- ந் தேதி மலைக்கோட்டை விரைவு ரயிலைப் பிடிக்க எழும்பூர் ரயில்  நிலையத்திற்கு வேப்பேரி வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல் ஆணையர் அலுவலகம் அருகே சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், ரங்கராஜன் வைத்திருந்த 500 கிராம் நகையுடன் கூடிய பையை பறித்துச் சென்றனர்.  அதிர்ச்சி அடைந்த ரங்கராஜன் வழிப்பறி திருடர்களை தனது இருசக்கர வாகனத்தில் துரத்த முயன்ற போது  காவல் ஆணையர் அலுவலகம் எதிரே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியதில் தூக்கி வீசப்பட்டு  விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.  ரங்கராஜன் வரும் வழியில் சவுகார்பேட்டை யிலிருந்து காவல் ஆணையர் அலுவலகம் வரை 25 போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன, அவற்றில் 20 கேமராக்கள் செயல்படாததால் கொள்ளையர்கள் குறித்து அடையாளங்கள் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் காவல் துறையினர். இதனால் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதே வேளையில் இந்த சம்பவத்தை ஆதாயக்கொலையாக வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளனர். தனியார் கட்டடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்