எரித்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை சென்னை அடுத்த செங்கல்பட்டில் கண்டெடுத்துள்ளனர். கேரளாவில் 50 நாட்களுக்கு முன்பு மாயமான கல்லூரி மாணவியின் அடையாளங்களுடன் ஒத்து போவதால் கேரளா போலீசார் செங்கல்பட்டு விரைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பழவேலி எனும் பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கண்டனர். உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது சுமார் 20 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலமாக இருக்கலாம் எனவும், எரித்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பெண் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்..? கொலையாளிகள் யார்.. ? கொலைக்கான காரணம் என்ன..? என்பது இதுவரை உறுதியாகவில்லை என்றாலும் கேரளாவில் கடந்த மார்ச் மாதம் மாயமான கல்லூரி மாணவியின் அடையாளங்களோடு ஒத்து போவதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜேஸ்னா மரியா ஜேம்ஸ். கேரளாவில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் மார்ச் 22-ம் தேதி மாயமானார். இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 50 நாட்களாக மாயமான ஜேஸ்னாவை தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் காணாமல்போன கல்லூரி மாணவி ஜேஸ்னா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ 2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரளா அரசு அறிவிப்பு செய்து இருந்தது. இவரது புகைப்படங்கள் ஏற்கனவே தமிழக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த புகைபடத்தில் பற்களில் க்ளிப் மாட்டியிருப்பது போன்று எரிந்த சடலத்தின் பற்களிலும் க்ளிப் உள்ளது.
மேலும் ஜேஸ்னாவின் வயது, உயரம், எடை மேலும் குறிப்பிட்ட சில அடையாளங்கள் ஒன்றுபோலக் காணப்படுவதால் சந்தேகம் வலுத்துள்ளது. இருப்பினும் கேரள மாநில காவல் துறைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பத்தினம்திட்ட போலீசார் செங்கல்பட்டு விரைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…