சென்னையில் கமல்ஹாசன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்!
சென்னையில் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் மர்ம நபர் ஏறிக்குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இல்லம் சென்னையில் உள்ள ஆழ்வார் பேட்டையில் உள்ளது.நேற்று காலை மர்மநபர் ஒருவர் கமல்ஹாசன் வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு வந்த அவர் கமல்ஹாசன் வீட்டு காவலாளியிடம் விசாரித்துள்ளார்.பின்னர் அவர் காவலரிடம் பேசியபடி கமல்ஹாசன் வீட்டின் சுவற்றில் ஏறி குதித்துள்ளார்.இதையறிந்த காவலாளி காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.
பின்னர் காவல்துறையின் விசாரணையில் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.