ஓடும் ரயிலில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் சென்னையில் செயின் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை சென்னை எழும்பூர் வந்து கொண்டிருந்தது. ரயில் நிலையத்தை நெருங்குவதற்கு முன்பு சிக்னல் கிடைக்கும் வரை காத்திருந்து ரயில்கள் மெதுவாக வருவது வழக்கம். அதே போல் மங்களூர் எக்ஸ்பிரஸ் சேத்துப்பட்டு ரயில் நிலையம் தாண்டியதும், – எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது S 3 பெட்டியில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த மோகனாம்பாள் என்ற பெண் கழிவறையில் இருந்த வெளியில் வந்த போது அவரது கழுத்தில் இருந்து 5 சவரன் செயினை பறித்தனர்.
அச்சத்தில் கூச்சலிடுவதற்குள் புதுக்கோட்டையை சேர்ந்த ஷீலா தேவி என்ற பெண்ணிடமும் 4 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு கொள்ளையன் ரயிலில் இருந்து இறங்கி ஓடினான். சக பயணிகள் கூச்சலிட்டு ரயில்வே பாதுகாப்பு படையினர் வருவதற்குள் கொள்ளையன் தப்பிவிட்டான். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மெதுவாக சென்ற சந்தர்பத்தை பயண்படுத்தி கொண்டு சேத்துபட்டு ரயில் நிலையத்தில் கொள்ளையன் ஏறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஓடும் ரயிலில் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…