சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் நடராஜன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்?
இன்று அதிகாலை சசிகலா கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் காலமானார். அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ம.நடராஜன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பின் நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் நள்ளிரவு 1.30 மணிக்கு பிரிந்தது.
நடராஜனின் உடல் எம்பாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடி அரசியலில் ஒதுங்கி இருந்த நடராஜன் புதிய பார்வை இதழின் ஆசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.