சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் விதிகளை மீறி மதுபானங்கள் விற்பனை!
விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் சென்னை பள்ளிக்கரணையில் டாஸ்மாக் கடையிலும், அருகிலுள்ள பாரிலும் மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேளச்சேரி – மேடவாக்கம் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்கு பிறகும், மதியம் 12 மணிக்கு முன்பும் இயங்கக் கூடாது என உத்தரவு உள்ள நிலையில், குறிப்பிட்ட இந்த மதுக்கடை ஊழியர்கள், அதிகாலை 6 மணிக்கே, மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கும் பணியை, எவ்வித தயக்கமும் இன்றி தொடங்கிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல், அருகில் உள்ள பாரிலும், தங்குதடையின்றி, குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கூடுதலாக 50 ரூபாய் வைத்து விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.