பைக் ரேசில் ஈடுபட்ட 6 இளைஞர்களை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு திரு.வி.க. பாலத்தில், புதனன்று இரவு இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிவேகத்தில் சீறிய அந்த இருசக்கர வாகனங்களால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்த அடையாறு போலீசார், பந்தயத்தில் ஈடுபட்டவர்களை விரட்டிச் சென்றனர். எனினும் தப்பிச் சென்ற அந்த இளைஞர்கள், ஒரு பைக்கை தவறி விட்டுச் சென்றனர். அதன் பதிவெண்ணைக் கொண்டு, உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அதில், பெரம்பூர் சாலமன், சூபியான், புளியந்தோப்பு கலீல், முஜிப், கரீம் உள்ளிட்ட 6 பேர் பைக் ரேசில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. அதன்பேரில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 6 பேரையும் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால்…
பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய…
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக…
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக்…
சென்னை : வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 27] எபிசோடில் மீனாவை துரத்தும் நபர் ,பதட்டத்தில் வித்யா வீட்டுக்குள் செல்லும் மீனா..…