சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்று கைதான மு.க.ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட 241 பேரில் 192 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் நாமக்கல்லில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி வீசிய திமுகவினரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக செயல் தலைவர் செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இதில் கைது செய்யப்பட்டனர்.
தற்போது சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்று கைதான மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…