சென்னை பள்ளிக்கரணையில் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தமது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவரான ஆனந்துக்கு தற்போது தான் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கரணை ஜெயச்சந்திரா நகரில் தாய், தந்தை, மனைவி மற்றும் இரட்டைக் குழந்தைகளுடன் வசித்து வந்த அவர், நள்ளிரவில் 4ஆவது மாடியில் இருந்து குதித்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்தன் உயிரிழந்தார். நெருக்கடியான சூழல் எதுவும் இல்லாத நிலையில், எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார் என்பது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.