சென்னையில் அச்சுறுத்தும் வழிப்பறி கொள்ளையர்கள்!
நாளுக்கு நாள் சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகளிடமும் நடக்கும் வழிப்பறி அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் போதை பழக்கங்களால் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருவதாக காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
சென்னையில் செயின் பறிப்பு… செல்போன் பறிப்பு சம்பங்கள் நாள்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்களாகிவிட்டன. செல்போன் பார்த்தபடியே தனியாக நடந்து செல்லும் பெண்கள், தனியாக நகை அணிந்து செல்லும் பெண்கள் எளிதான இலக்கு என்பதால் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வந்தனர். தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்காமல் செல்வதனால் துணிச்சல் வந்த கொள்ளையர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றிணைந்து ஆண்களிடமும் கைவரிசை காட்ட தொடங்கினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.