செட்டாப் பாக்ஸ் விநியோகம் செய்யாத கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் பதிவு ரத்து : தமிழக அரசு அதிரடி..!

Published by
Dinasuvadu desk

அரசு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாத அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்களின் பதிவு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சுமார் 3.12 லட்சம் விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் விநியோகிக்கப்பட்டு டிஜிட்டல் முறையிலான கேபிள் டிவி தங்குதடையின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்திய தொலைதொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவின்படி அனலாக் முறைறயில் கேபிள் டிவி சிக்னல் ஒளிபரப்பு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்க கோரி ஆதார் அட்டை கொடுத்தும் பொதுமக்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்காமல் அனலாக் முறைறயில் கேபிள் டிவி சிக்னல் ஒளிபரப்பு செய்து வரும் கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மீது உரிய சட்ட பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொது மக்களிடம் கேபிள் டிவிக்கான கட்டணத்தை வசூல் செய்துவிட்டு அரசுக்கு செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மீதும் உரிய சட்டபூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாத அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவா்கள் விலையில்லா டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தவறும் பட்சத்தில் அவா்களது பதிவு ரத்து செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அரசு டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் விநியோகம் செய்ய புதிய கேபிள் ஆப்ரேட்டா்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

செட் டாப் பாக்ஸ் விநியோகம் செய்வதில் சுணக்கம் காட்டும் கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மீது பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தனியார் கேபிள் டிவி டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் என பொதுமக்களை ஏமாற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் மீது பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.

Recent Posts

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

8 minutes ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

42 minutes ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

1 hour ago

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை! சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

1 hour ago

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

2 hours ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…

3 hours ago