செஞ்சி மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்!
நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது செஞ்சி மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.