சூறை காற்றுடன் பெய்து வரும் தொடர் மழையால் கன்னியாகுமரியில் 3 பேர் உயிரிழப்பு!
சூறை காற்றுடன் பெய்து வரும் தொடர் மழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் அறுந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகினர். பாறையில் சறுக்கி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஐந்துளி பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்த போது, மின்கம்பி அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் எஸ். டி. மங்காடு பகுதியைச் சேர்ந்த பாலையன் என்ற முதியவரும் சூறைகாற்றால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் பலியானார். திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஷாஜின் என்ற இளைஞர் அவரது வீட்டின் அருகே உள்ள சிதறால் மலை கோயிலுக்கு நண்பர்களுடன் சென்றபோது, பாறையில் இருந்து சறுக்கி கீழே விழுந்து உயிர் இழந்தார் கனமழை மற்றும் சூறைக்காற்றால் 28 வீடுகள் சேதமடைந்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.