சுத்த படுத்தும் சூப்பர்ஹீரோக்கள்……..வாழ்க்கை சுத்தமாக இல்லை……..கொடுக்காமல் கேடுக்கும் அரசு…!!
துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் மாநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டது மேலும் அதற்கான பணிகளை தொடங்கிய நிலையில் மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகரில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்கின்ற தொழிலாளிகள் கையுறை சுவாசப் பாதுகாப்பு முகமூடி பாதுகாப்பு காலணி போன்ற அடிப்படை வசதி பொருட்கள் இல்லாமல் வெறும் கைகளால் பணிகளை செய்து வருகின்றன.துப்புரவுப் பணியாளர்களின் இந்த பணி வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த துப்புரவு பணியில் ஈடுபடுவோர் உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதோடு நிறுத்திவிடாமல் அவற்றை அணிவதன் பற்றிய அவசியத்தை துப்புரவுப் பணியாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
DINASUVADU