சீறி பாய காத்திருக்கும் காளைகளும்…!காவல்துறை வேண்டுகோளும்..!!ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு..!!

Default Image
பொங்கல் 15ம் தேதி நடைபெறுகிறது.இதனையொட்டி களைகட்ட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளும்,மாடுபிடி வீரர்களும் தயாரகி உள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியுடைய மாடுபிடிவீரர்கள் தகுதிபெற்றனர்.
இந்நிலையில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டி போட்டிகளில் வீரர்களின் பாதுகாப்பி மற்றும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு உயர்தர முதலுதவியும், எல்லா வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியுடன்  கூடிய நடமாடும் மருத்துமனைகளும், அதனுடன் மருத்துவர்களும் மற்றும் மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காளைகளை பிடிக்க தெரிந்த, முறையாக பயிற்சி பெற்ற மாடுபிடி வீரர்கள்  மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். இதில் முக்கியமாக பார்வையாளர்களை ஜல்லிகட்டு போட்டியின் போது பாதுக்காக்கின்ற வகையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படயுள்ளது.இதில் பார்வையாளர்கள் அனைவரும் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அமர்ந்து ஜல்லிக்கட்டியனை பார்வையிடுவதுடன், தங்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தங்ககளது வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீறிப்பாய உள்ள காளைகளின் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியானது சிறப்பானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் நடைபெற பொதுமக்களும் ,மாடுபிடி வீரர்களும் மற்றும் மாட்டின் உரிமையாளர்களும் தங்களது முழு ஒத்துழைப்பை தருமாறு மதுரை மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெகுச்சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்