உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 926 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.
உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காளைகளும் காளையர்களும் சரி நிகராக விளையாடி வருந்த நிலையில் 35 பேர் காயமடையந்தனர்.இருவர் மாடு முட்டியதால் உயிரிழந்துள்ளனர்.
மாலை 4 மணிக்கு முடிய வேண்டிய ஜல்லிக்கட்டு 5 மணிவரை நீட்டிக்கப்பட்டது அவ்வாறு நீட்டிக்கட்டு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்து உள்ளது.இந்த போட்டியில் மொத்தம் பதிவு செய்யப்பட்டவர்களில் 660 காளைகள் மற்றும் 695 மாடுபிடி வீரர்கள் மட்டுமே தற்போது வரை வாய்ப்பு அளிக்கப்பட்டு பங்கேற்று விளையாடி உள்ளனர். இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப்பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார் சிறப்பு பரிசு வழங்கப்பட்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது அதன்படி 19 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது அடுத்ததாக 14 காளைகளை தழுவிய கார்த்திக் 2வது பரிசையும், 13 காளைகளை தழுவிய கணேசன் 3வது பரிசை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…