தூத்துக்குடியில் தனியார் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்?எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி
துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை முதலமைச்சரின் அறிக்கையில் எந்த இடத்திலும் இல்லை” என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேரவையில் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவிக்க முதலமைச்சருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டது” என்றும் வருத்தம் தெரிவித்தார். போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்” .”சீருடை அணியாத போலீசாரும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்” .துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”.போராட்டக்காரர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.தூத்துக்குடியில் தனியார் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.